சினிமா செய்திகள்
24 கொலை செய்த செல்வராகவன், 25 கொலை செய்த கீர்த்தி சுரேஷ்: ‘சாணிக்காகிதம்’ டிரைலர்

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்த ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அமேசான் ஓடிடியில் வரும் மே மாதம் ஆறாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘சாணிக்காகிதம்’ படத்தின் டீசர் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த ட்ரைலரில் தான் 24 கொலை செய்ததாக செல்வராகவன் வாக்குமூலம் அளிக்கிறார். அதே போல் தான் 25 கொலை செய்ததாக கீர்த்தி சுரேஷ் வாக்குமூலம் அளிக்கிறார். இந்த கணக்கு இடிக்கிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கூறும் பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
செல்வராகவன் சமீபத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் மிக அருமையாக நடித்து வந்த நிலையில் அவரது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.