Connect with us

சினிமா

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

Published

on

நயன் தாராவின் 63வது படமான ஐரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு, இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.

கெளதம் மேனன் தயாரிப்பில், லக்‌ஷ்மி என்ற குறும்படத்தை இயக்கி சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் சர்ஜுன், அடுத்ததாக சத்யராஜ், வரலக்‌ஷ்மி சரத்குமாரை வைத்து எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், நயன்தாராவின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ஐரா படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்திரனின் யானையான ஐராவதத்தின் சுருக்கமே ஐரா என விளக்கமளித்துள்ளார் இயக்குநர் சர்ஜுன். வரும் டிசம்பர் மாதம் படம் ரிலீசாகவுள்ளது. மேலும், முதன்முறையாக இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். ஒரு நயன்தாராவுக்கே வசூல் மழை பொழிகிறது. டபுள் நயன்தாரா என்றால் நிச்சயம் வசூல் வேட்டை தான்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..