வீடியோ
நண்பர்கள் கொண்டாடும் நட்பே துணை ஃபேர்வெல் சாங் ரிலீஸ்!
சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நட்பே துணை படத்தின் ஃபேர்வெல் சாங் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி-யின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்பே துணை. இந்த படத்தில் மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு, மீண்டும் நாயகனாக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆனாகா என்ற புது வரவு அறிமுகமாகிறார். மேலும், யூடியூப் பிரபலங்களான ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சாரா, எருமசாணி விஜய் மற்றும் பல யூடியூபர்கள் இந்த படத்திலும் நண்பர்களாக நடித்துள்ளனர்.
ஹாக்கி போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பள்ளிக்கூடம் – ஃபேர்வெல் சாங் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடல் வரிகளை எழுதி இசையமைக்க, சஞ்சீத் ஹெக்டே என்பவர் பாடலை பாடியுள்ளார்.
இனி வரும் கல்லூரி ஃபேர்வெல்களில் இந்த பாடலும் இடம்பெறும் என்பதில், எந்தவொரு சந்தேகமும் இல்லை.