சினிமா செய்திகள்
விஜய் டிவி டிடி கர்ப்பமா? வளைகாப்பு புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வருவதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு உதவி இயக்குநர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் டிடிக்கும் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இப்போது கடந்த 5 ஆண்டுகளாக டிடி தனிமையில் தான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் டிடி திடீரென கர்ப்பமாக இருப்பதாகவும் அவரது வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது டிடி தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் அவர் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் என்றும் அதுகுறித்து புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.


















