சினிமா செய்திகள்
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ‘அரண்மனை 3’: தேதி அறிவிப்பு!

சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 3’ திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அரண்மனை 3’ ரிலீசாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 ஓடுதளத்தில் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜி5 ஓடிடி தளத்தில் டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அரண்மனை 3’ என்ற படமும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புரமோஷன் பணிகளை தொலைக்காட்சி நிர்வாகம் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’அரண்மனை 3’ திரைப்படத்தில் சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.