Connect with us

சினிமா

திருமாவளவனை தொடர்ந்து மூடர் கூடம் நவீனும் விக்ரமனுக்கு ஆதரவு; இப்பவே அவர் வின்னர் தானாம்!

Published

on

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இந்த முறை டைட்டிலை யார் வெல்வார் என்கிற பெரிய குழப்பமே நிலவி வருகிறது. அரசியல் கட்சி ஒன்று பகிரங்கமாகவே விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மூடர்கூடம் இயக்குநர் நவீனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ளது. வரும் சனிக்கிழமை அதற்கான ஷூட்டிங் நடைபெற உள்ளது.

இதுவரை சிறப்பாக விளையாடி இறுதி வாரத்திற்குள் அமுதவாணன் முதல் நபராக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று உள்ளே நுழைந்தார். அடுத்ததாக கடந்த வாரம் அதிக வாக்குகளுடன் அசீம் 2வதாக உள்ளே நுழைந்தார். மூன்றாவதாக விக்ரமனும் இறுதி போட்டியாளராக தேர்வானார்.

மேலும், ஷிவின், கதிரவன் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்குள் நுழைந்தனர். இதில், கதிரவன் 3 லட்சம் பண மூட்டையுடன் உடனடியாக வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

மீண்டும் ஒரு பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், யார் எடுப்பார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க திருமாவளவன் விக்ரமன் வெற்றி பெற வேண்டும் அவருக்கு ஓட்டுப் போடுங்கள் என ட்வீட் போட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. வனிதா விஜயகுமார் நேரடியாகவே திருமா எப்படி இப்படியொரு ஆதரவை தெரிவித்து பிக் பாஸ் விளையாட்டில் இன்ஃப்ளூயன்ஸ் செய்யலாம் என வந்து விட்டார்.

இதற்கு முன் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது அண்ணனுக்காக ட்வீட் போடும் போதெல்லாம் கோமாவில் இருந்தீங்களா என விசிகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குநர் நவீன் பிக் பாஸ் விக்ரமனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

”#BiggBossTamil6 வெகுஜன மக்களை பெரிதும் சென்றடையகூடிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, பகுத்தறிவு கருத்துகள் பேசி, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியிருக்கும் தோழர் @RVikraman-கு வாழ்த்துகள். அவர் நோக்கம் நிறைவேறியதாகவே நான் கருதுகிறேன். இதுவே வெற்றிதான். அறத்தின் வெற்றி #அறம்வெல்லும்” என ட்வீட் போட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
News expert advice.