சினிமா
பிக் பாஸ் டைட்டில் கிடைக்கலனா என்ன? இந்த பிக் பாஸ் மனசையே பிடிச்சிட்டாரே விக்ரமன்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி வரை விக்ரமன் தான் டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விக்ரமன் ரசிகர்கள் வேதனைப்படும் அளவுக்கு டைட்டிலை தூக்கி உலக நாயகன் கமல்ஹாசன் அசீம் கையில் கொடுத்து விட்டார்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் கிராண்ட் ஃபினாலே இந்தியளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அப்யூசர் அசீமுக்கு டைட்டில் எப்படி கொடுக்கலாம் என்றும் இது மோசமான உதாரணம் என்றும் பலரும் விளாசித் தள்ளினர்.

#image_title
மேலும், அசீம் மக்கள் ஓட்டுக்களை பெற்று பிக் பாஸ் டைட்டிலை வெல்லவில்லை என்றும் எல்லாமே பிஆர் செய்த பித்தலாட்டம் தான். காசு கொடுத்து டைட்டில் வாங்கியதால் தான் இத்தனை மக்கள் அசீமை இப்படி ட்ரோல் செய்கின்றனர் என்றும் விக்ரமன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.
தனலட்சுமிக்கு விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட முறை ஆதரவாக பேசி வந்த நிலையில், வெளியே வந்ததும் சீரியல் வாய்ப்புகளுக்காக அசீம் உடன் சேர்ந்துக் கொண்டு விக்ரமனை கண்ட மேனிக்கு பேசி வருகிறார் தனலட்சுமி என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

#image_title
இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்காக தினமும் ஹெலிகாப்டரில் திருப்பதி டு கடப்பா சென்று நடித்து வந்த கமல்ஹாசன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில், சென்னை வந்துள்ளார்.
கமல்ஹாசன் சென்னை வந்ததை அறிந்ததுமே அவரை ஓடோடி சென்று விக்ரமன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.





















