சினிமா
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்கிற ஹாட் அப்டேட் லீக் ஆகிவிட்டது.
விஜய் டிவியை சேர்ந்த காமெடியன் அமுதவாணன் கடந்த வாரமே டிக்கெட் டு ஃபினாலேவை வென்ற நிலையில், கிராண்ட் ஃபினாலே வாரத்துக்குள் நுழைந்து விட்டார். அவரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.
அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், மைனா நந்தினி மற்றும் ஏடிகே ஆகிய போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆன நிலையில், ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு ஏகப்பட்ட நபர்கள் என்ட்ரி கொடுத்து இருந்தனர். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜே பார்வதி மற்றும் பிக் பாஸ் விமர்சகர்கள் என பலரும் உள்ளே வந்து போட்டியாளர்களை ஒரு வழி செய்து விட்டு சென்றனர்.
மேலும், இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களான ஜிபி முத்து, உப்புமா மம்மி சாந்தி, விஜே மகேஸ்வரி, குயின்ஸி, ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன், ராம் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமையான இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஏடிகே வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனனி வெளியேறிய வாரத்திலேயே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஏடிகே இத்தனை வாரங்கள் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அந்த தங்கமான மனசுக்காரர் கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் சென்றிருக்கலாம் மைனாவை வெளியே அனுப்பி இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்த வாரம் மொட்டையெல்லாம் அடித்து தியாகத்தின் திருவுருவமாக மாறிய ஏடிகேவை இப்படி வெளியே அனுப்பிட்டாங்களே என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.