சினிமா
கமல் சட்டையில் காக்கா கக்கா போயிடுச்சா? பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு என்ன இப்படி வந்திருக்காரு!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷோ இன்று மற்றும் நாளை மதியம் வரை ஷூட்டிங் நடத்தப்பட்டு நாளை மாலை 6 மணி முதல் இரவு வரை நிகழ்ச்சி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் ராஜு ஜெயமோகனுக்கு டைட்டில் வழங்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார் என்கிற ஆவல் அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் என மூன்றே மூன்று இறுதி போட்டியாளர்கள் உள்ள நிலையில், கிராண்ட் ஃபினாலே கடைசி வரை திக் திக் நொடிகளாகவே நகரும் என்றே தெரிகிறது. வழக்கமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் கோட் சூட் உடையில் செம கெத்தாக வருவார்.
ஆனால், இந்த முறை அவர் அணிந்து வந்துள்ள வித்தியாசமான ஃபேஷன் உடை ரசிகர்களால் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதில், கமல்ஹாசன் அணிந்துள்ள உடையை பார்த்த ரசிகர்கள் என்ன சார் உங்க டிரெஸ்ல காக்கா கக்கா போயிடுச்சா என்றும் வெள்ளை பெயிண்டை யாராவது கொட்டிட்டாங்களா என்றும் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஃபேஷன் விரும்பியான கமல்ஹாசன் வித்தியாசமான உடைகளை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நான் போட்ட ஆடைகளை ஃபிலிம் ஸ்டாரும் அணிந்ததில்லை என இந்திய படத்தில் வரும் பாடல் போல கமல் அணிந்த ஆடைகளை மற்ற இந்திய நடிகர்கள் அணிந்திருக்க வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
எந்த உடை அணிந்தாலும், அதில் கலக்கு கலக்கிவிடுவார் கமல்ஹாசன் என்று அவரது ரசிகர்கள் இந்த பெயிண்ட் கொட்டியது போல இருக்கும் ஆடையையும் ரசித்து பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.