சினிமா
விக்ரமனை வீழ்த்தி பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டித் தூக்கிய அசீம்; என்ன பரிசு தெரியுமா?
Published
1 week agoon
By
Saranya
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என சொல்லிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு கடைசியில் விஜய் டிவி ஆள் தான்ப்பா வெல்வார் என அசீமுக்கு டைட்டிலை தூக்கி கொடுத்து விட்டனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசியாக மூன்று பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை 105 நாட்கள் இருந்தனர். இந்த முறை அசீமுக்கு டைட்டில் கொடுப்பது கமலுக்கே பிடிக்கவில்லை போலத்தான் தெரிகிறது. அதனால் தான் வந்ததில் இருந்தே மூன்று பேரும் வின்னர் மூன்று பேரும் வின்னர் என விக்ரமன் மற்றும் ஷிவினை ஆறுதல் படுத்தி வந்தார்.
அதே போல ஒருவரை எவிக்ட் செய்யாமல் மூன்று பேரையும் பல்லக்கில் வைத்து கிரேன் மூலம் பிக் பாஸ் ஷோவுக்கு அழைத்து வந்தனர்.
கடைசியாக ஸ்பாட் லைட் அடித்து ஷிவினை எவிக்ட் செய்து விட்டனர். முன்னாள் போட்டியாளர்கள் யாருமே கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ளவில்லை. எந்தவொரு சிறப்பு அறிவிப்புகளும் இல்லாமல் மொட்டையாக நிகழ்ச்சி முடிந்து விட்டது.
வெற்றி பெற்ற அசீமுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு மட்டுமின்றி கிராண்ட் விடாரா காரும் பரிசாக கிடைத்தது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு எக்கச்சக்க பரிசுகளுடன் அதிக சம்பளத்துடன் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்று வெற்றி வந்தா ஆடவும் மாட்டேன். வரலைன்னா வாடாவும் மாட்டேன் என அசீம் பஞ்ச் பேசி தனது சந்தோஷ தருணத்தை கொண்டாடினார்.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
கமல் சட்டையில் காக்கா கக்கா போயிடுச்சா? பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு என்ன இப்படி வந்திருக்காரு!
-
திருமாவளவனை தொடர்ந்து மூடர் கூடம் நவீனும் விக்ரமனுக்கு ஆதரவு; இப்பவே அவர் வின்னர் தானாம்!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!