சினிமா செய்திகள்
’மாநாடு’ படத்தை அடுத்து குறுகியகால தயாரிப்பு: வெங்கட்பிரபுவின் அடுத்த படம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்திற்கு நார்வே நாட்டின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நான்கு விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் வெற்றியை அடுத்து ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களை இயக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் குறுகியகால திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’மன்மதலீலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1976ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ’மன்மதலீலை’ படத்தின் ரீமேக் படமா இது? அல்லது புது கதையா என்பதை படம் வந்தபிறகு தெரிந்து கொள்வோம்.
Here is the 1st look of my next fun quirky ride! #AVenkatPrabhuQuickie #VP10 #Manmathaleelai (tamil) #Manmadaleela (telugu) with my brother @AshokSelvan a #IsaiPlayboy @Premgiamaren musical @that_Cameraman @UmeshJKumar thanks to @Rockfortent thank q @TSivaAmma saar! pic.twitter.com/1CNWBkCBRd
— venkat prabhu (@vp_offl) January 15, 2022


















