சினிமா
தலை கீழாகத்தான் குதிப்பேன்.. தளபதி 68 இயக்குநர் வெங்கட் பிரபு.. கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்!

இயக்குநர் வம்சி வாரிசு படத்தை இயக்கும் போதே அந்த படம் சொதப்பும் என அஜித் ரசிகர்கள் கலாய்த்த நிலையில், அதை போலவே வாரிசு படமும் மெகா சீரியல் போல மாறி விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் பெரிய பல்பை கொடுத்தது.
இந்நிலையில், அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடம்பிடித்து நடிகர் விஜய் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், தலை கீழாகத்தான் குதிப்பேன் என அஜித் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

#image_title
வெங்கட் பிரபு அடுத்ததாக ஏஜிஎஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்துத் தான் ஒரு படத்தை இயக்குவதாக இருந்ததாகவும் ஆனால், மாவீரன், கமல் தயாரிப்பில் ஒரு படம் என சிவகார்த்திகேயன் பிசியாகி விட்ட நிலையில், விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் உடனடியாக அவருக்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறாராம்.
மாநாடு படத்தை பார்த்து விட்டே மயங்கிப் போன விஜய் நாம் விரைவில் ஒரு படத்தை பண்ணலாம் என அப்பவே தலையை ஆட்டிய நிலையில், முன் வைத்த காலை பின் வைக்காமல் ஏஜிஎஸ் நிறுவனம் வெங்கட் பிரபு தான் இயக்குநர் என வந்த உடனே நேரத்தை வீணடிக்காமல் சட்டென ஒரு படத்தை செம குயிக்காக முடித்து விடலாம் என பக்காவாக பிளான் போட்டு விஜய் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கின்றனர்.

#image_title
ஆனால், அதே சமயம் மாநாடு படத்தின் கதையையே சிம்பு தான் வெங்கட் பிரபுவுக்கு பதில் சீரமைத்தார் என்றும் அந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை ஏ படமும் சமீபத்தில் வெளியான கஸ்டடி படமும் படு தோல்வியை தழுவிய நிலையில், குதித்தால் தலை கீழாகத்தான் குதிப்பேன் என விஜய் குதித்திருக்கிறார் என அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.
லியோவை விரைவில் முடித்து விட்டு தளபதி 68 படத்தையே விஜய் ஆரம்பிக்க போகிறார். உங்க விடாமுயற்சி பட தயாரிப்பு நிறுவனத்தில் ரெய்டு எல்லாம் நடந்த நிலையில், இப்போதைக்கு ஷூட்டிங் ஆரம்பிக்குமா? அஜித்துக்கு ஹீரொயின் வில்லன் எல்லாம் கிடைப்பார்களா? எப்போது விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்றே தெரியவில்லை. அதற்குள் எங்களை வந்து கலாய்க்கிறீங்களா? இன்னமும் மங்காத்தாடான்னு சுத்திட்டு திரியுற பயலுக தானே அஜித் ரசிகர்கள் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.