சினிமா
மறுபடியும் போட்டோஷூட் பக்கம் திரும்பிய மாளவிகா மோகனன்.. கிறிஸ்டி படம் ஃபிளாப் தான் காரணமா?

நயன்தாராவை பற்றி விமர்சித்ததாக நடிகை மாளவிகா மோகனன் பற்றி மறைமுகமாக சமீபத்திய பேட்டியில் நயன்தாரா பேசியதும் ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனனை பயங்கரமாக ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
மேலும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லேடி சூப்பர்ஸ்டார் என யாரையும் சொல்லக் கூடாது என மாளவிகா மோகனன் மறுபடியும் நயன்தாராவை வம்பிழுத்திருந்தார்.

#image_title
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த நடிப்பை ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், நயன்தாரா பற்றி நீங்க விமர்சிக்கலாமா என லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மாளவிகா மோகனனை பொளந்து கட்டினர்.
இப்படி திடீரென சர்ச்சையை மாளவிகா மோகனன் கிளப்ப காரணமே அவரது புதிய மலையாள திரைப்படமான கிறிஸ்டி படத்திற்கான ப்ரோமோஷன் தான் என்றும் ட்ரோல்கள் பறந்தன.
இந்நிலையில், கிறிஸ்டி படமும் மாளவிகாவுக்கு ஃபிளாப் கொடுத்த நிலையில், மீண்டும் கன்னா பின்னாவென கவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.

#image_title
மாறன் திரைப்படம் வெளியாகும் முன்னதாக அந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய ஹாட் பிகினி உடையில் கவர்ச்சி காட்டியதை போலவே இப்பவும் ட்ரை பண்றாரா மாளவிகா என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
மாளவிகா மோகனனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் படு ஆபாசமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், அந்த படத்தில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டதாக வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.