சினிமா
ஷெட்டியை முன் நிறுத்துகிறாரா அனுஷ்கா? புதிய படத்தின் தலைப்பு இப்படி இருக்கே?

சமீபத்தில் தனுஷின் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் தனது பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் தன்னை சம்யுக்தா என்றே அழையுங்கள் போதும் என்றும் கூறி பலரது பாராட்டுக்களை அள்ளி இருந்தார்.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது 48வது படத்தின் டைட்டிலில் ஷெட்டியை முன்னிறுத்தி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

#image_title
அனுஷ்கா ஷெட்டி என தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்தி வரும் நடிகை அனுஷ்காவின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என அனுஷ்காவின் 48வது படத்திற்கான டைட்டில் வைக்கபட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

#image_title
இந்த படத்தில் அனுஷ்கா சமையல் கலைஞராக நடித்து வருவது ஏற்கனவே ரிவீல் செய்யப்பட்ட நிலையில், தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி அனுஷ்காவுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வரும் அனுஷ்கா ஷெட்டி 3 ஆண்டுகளுக்கு பிறகு தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டு உள்ள நிலையில், அனுஷ்காவை மீண்டும் திரையில் காண அவரது ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர்.