Connect with us

சினிமா செய்திகள்

அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்கின்றதா லைகா? ஆச்சரிய தகவல்

Published

on

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக அஜித்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் ஒப்புக் கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் அஜித் 61 ஆகிய மூன்று படங்களுக்குமே அவர் ஒரு படத்திற்கு 60 முதல் 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அஜித்துக்கு 100 கோடி சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தை வைத்து நீண்ட வருடங்களாக ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டுமென லைக்கா நிறுவனம் முயற்சி செய்து வந்தது என்பதும் தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அதை நழுவ விடக்கூடாது என்பதற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் தர ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஒரு நடிகர் வாங்கும் சம்பளம் என்பது அந்த நடிகருக்கும் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்பதால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.