ஆரோக்கியம்
தொப்பை கரையவும், எடையை குறைக்கவும் உதவும் குறைந்த கலோரி காய்கறிகள்!

வெயிட் லாஸ் வெற்றி பெற வேண்டுமா? இவைகளை உணவில் சேர்த்தாலே போதும்!
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உணவு பழக்கவழக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்ட காய்கறிகள் தொப்பை கரைக்கவும், உடல் மெட்டபாலிசத்தை (metabolism) தூண்டும் ஆற்றலும் கொண்டுள்ளன. அப்படி, எடை குறைக்கும் பயணத்தில் சாத்தியமான மாற்றங்களை தரும் சில சிறந்த காய்கறிகள் இதோ:
வெள்ளரிக்காய் – நீர்ச்சத்து மிகுந்தது. நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்தும். தினமும் ஒரு வெள்ளரிக்காய் உண்டாலே நல்ல பலன்கள் கிடைக்கும்.
பூசணிக்காய் – உடலுக்கு தேவையான நீர்ச்சத்து, குறைந்த கலோரி. கொழுப்பை கரைக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
கீரை வகைகள் – இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் சக்தி கொண்டவை.
முட்டைக்கோஸ் – நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளுடன் செரிமானத்தையும் வயிற்றுப் பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.
வெண்டைக்காய் – கரையும் நார்ச்சத்தால் செரிமான சக்தியை அதிகரிக்கும். குறைவான எண்ணெயில் சமைத்து எடுத்துக்கொள்வது நல்லது.
பாகற்காய் – கசப்பானது என்றாலும், உடலை டிடாக்ஸ் செய்யும் சக்தி கொண்டது. கொழுப்பை கரைக்கிறது.
சுரைக்காய் – நச்சுக்களை வெளியேற்றும், நார்ச்சத்து நிறைந்த காய்கறி. மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது.
முள்ளங்கி – நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம். வெயிட் லாஸ், டிடாக்ஸில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட் – பீட்டா கரோட்டின், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. கொழுப்பை எரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இவை அனைத்தும் இயற்கையாகவும், நம்பிக்கைக்குரியவையாகவும் உள்ள வெயிட் லாஸ் காய்கறிகள். தினசரி உணவில் சேர்த்தால் உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும்.















