கேலரி
புது கெட்டப்பில் தெறிக்கவிட்ட லாஸ்லியா… அதிர்ச்சியான ரசிகர்கள்….

விஜய் தொலைக்காட்சியில் நடிகரும்ம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒரு திரைப்படம் பிரெண்ட்ஷிப். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது.

ஆனால், இப்படம் வெற்றி பெறவில்லை. இப்படம் மூலம் தனது சினிமா வாழ்க்கை மாறும் என காத்திருந்த லாஸ்லியாவுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி நடித்து வரும் ‘கூகுள் குட்டப்பா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் மூலமாகவாவது தன் திரை வாழ்க்கை மாறும் என அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெற அவர் விதவிதமான உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அழகான தலை முடியை வெட்டி பாப் கட்டிங்குக்கு மாறியுள்ளார். அவரின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.



















