சினிமா
கையில் கரும்புடன்! அழகான ராட்சியாக மாறிய பிக் பாஸ் லாஸ்லியா; சொக்கிப் போன ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான நடிகை லாஸ்லியா மரியநேசன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவாடை சட்டையில் பக்காவாக போஸ் கொடுத்தும் வீடியோ வெளியிட்டும் தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். கவின் உடன் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் போட்ட காதல் டிராமா பலரையும் வெகுவாக ஈர்த்தது.
ஆனால், அப்பாவின் உத்தரவுக்கு பிறகு கவினை காதலிப்பதை அப்படியே விட்டு விட்டதாக சொன்ன லாஸ்லியா அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், கோலிவுட்டில் ஹீரோயினாக மாறினார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான பிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை லாஸ்லியா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்து பிக் பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக கே.எஸ். ரவிக்குமார் ஹீரோவாக நடித்த கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும் மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படம் அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை.
ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லாஸ்லியாவும் ஐஸ்வர்யா தத்தாவும் நடித்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. பிக் பாஸ் சீசன் 4ல் டைட்டில் வென்ற பிறகு ஆரி அர்ஜுனன் நடித்து வெளியான ஒரே படம் நெஞ்சுக்கு நீதி மட்டும் தான். அதிலும், அவர் ஹீரோ கிடையாது.
இந்நிலையில், மீண்டும் சினிமா வாய்ப்புகளை கவர கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வரும் நடிகை லாஸ்லியா தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கையில் கரும்புடன் கிராமத்தில் அழகாக பாவாடை சட்டை அணிந்து கொண்டு ரசிகர்களை கவரும் வண்ணம் ஆட்டம் போட்டு, அதனுடன் அழகான ராட்சசியே பாடலையும் இணைத்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீல் லைக்குகளை அள்ளி வருகின்றன.