Connect with us

சினிமா செய்திகள்

கைதி 2 ரெடி.. அப்ப ரஜினி படம் என்னாச்சு?

Published

on

கார்த்தி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் கைதி.

மாநகரம், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை எடுத்து முடித்து ரிலிஸ்க்கு தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கு போன்றவை முடிந்த பிறகு திரை அரங்குகள் திறக்கும் போது முதல் படமாக மாஸ்டர் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

மறுபக்கம், லோகேஸ்ஜ் கனகராஜ் ரஜினிக்கு கதை கூறியதாகவும், ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால், திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நடைபெற்றுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படமும் அடங்கும்.

அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முடிந்துள்ளதால் லோகேஷ் கனகராஜ் ஃப்ரீ. ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு வர கால தாமதமாகும்.

எனவே கார்த்தி – லோகேஷ் கனகராஜ் இருவரும் கைதி 2 படம் குறித்து விவாதித்து முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி படத்தை லோச்கேஷ் கனகராஜ் இயக்குவார். 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் இந்த திரைப்படம் அறிவிப்பும் தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் சிவகுமார் குடும்பத்திலிருந்து ஒருவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் வந்தாலும், அதற்குள் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை முடித்துவிட்டு வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Clay vs concrete roof tiles : complete comparison for cost, durability & style commercial & residential roof contractor clark roofing.