சினிமா
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நான்கைந்து திரைப்படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கோடியில் ஒருவனும் ஒன்று. இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.
மெட்ரோ, மீசைய முறுக்கு ஆகிய படங்களில் நடித்த ஆத்மிகா இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ஒரு அரசியல் திரில்லராக உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் வருகிற 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாவது குறிப்பிடத்தக்கது.







