சினிமா செய்திகள்
நடிகர் கார்த்தியின் இரண்டாவது குழந்தையின் பெயர் இதுதான்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவர் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழ் திரை உலகில் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் கடந்த 2013ஆம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ’உமையாள்’ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்ததன் அறிவிப்பை தனது டுவிட்டரில் கார்த்தி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு ’கந்தன்’ என்று பெயர் சூட்டி உள்ளதாக டுவிட்டரில் கார்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்…
அப்பா.
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்…
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X— Karthi (@Karthi_Offl) March 17, 2021
















