சினிமா
சூர்யா மிஸ் ஆனா என்ன? தம்பி கார்த்தியை கரெக்ட் செய்த க்ரித்தி ஷெட்டி!

விஜய் சேதுபதிக்கு மகளாக உப்பென்னா படத்தில் நடித்து இந்தியளவில் பிரபலமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த பழைய வணங்கான் படத்தில் இவர் தான் ஹீரோயின்.
ஆனால், இயக்குநர் பாலா உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக சூர்யா விலகிய நிலையில், ஹீரோயினையும் பாலா மாற்றி விட்டார். அருண் விஜய் அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

#image_title
தி வாரியர் பைலிங்குவல் படம் மூலம் கடந்த ஆண்டு தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் அறிமுகமான க்ரித்தி ஷெட்டிக்கு அந்த சிம்பு பாடிய புல்லட் பாடல் ஒன்று மட்டுமே கை கொடுத்தது. படம் படு தோல்வியை சந்தித்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள பைலிங்குவல் படமான கஸ்டடி படத்தில் நடித்துள்ள க்ரித்தி ஷெட்டி விரைவில் வெளியாக உள்ள அந்த படத்தின் ரிலீசுக்காக ஆர்வமாக காத்திருக்கிறார்.
மேலும், ஜெயம் ரவி நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ஜீனி படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

#image_title
இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் புதிய படத்திலும் ஹீரோயின் வாய்ப்பை தட்டிப் பறித்து இருக்கிறார் இந்த இளம் புயல் க்ரித்தி ஷெட்டி.
தமிழில் எப்படியாவது நம்பர் ஒன் நடிகையாக மாற வேண்டும் என்கிற முனைப்பில் பல படங்களில் குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டு க்ரித்தி ஷெட்டி நடித்து வருவதால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்கின்றனர்.
ஒரு படத்துக்கு குறைந்த பட்சமாக 40 முதல் 50 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி வருகிறாராம் க்ரித்தி ஷெட்டி.