சினிமா செய்திகள்
’திட்டமிட்டபடி ‘கர்ணன்’ ரிலீஸ் ஆகும்: தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நாளை ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென சற்று முன்னர் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் சற்று முன்னர் ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் பதிவு செய்த ட்வீட்டில் திட்டமிட்டபடி ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீஸாகும் என்றும் 50 சதவீத இருக்கைகள் என்றாலும் அதனை பின்பற்றி படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
As promised #Karnan will arrive to theatres tomorrow. As per the need guidelines of our Govt #Karnan will be screened with 50% capacity in theatres along with proper safety measures. I kindly request everyone to provide your support for #Karnan @dhanushkraja @mari_selvaraj
— Kalaippuli S Thanu (@theVcreations) April 8, 2021




















