சினிமா செய்திகள்
காத்துவாக்குல ரெண்டு காதல்: செம எனர்ஜி பாடல் ரிலீஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.
ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன/ இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.
டப்பம் டிப்பம் என்ற இந்த பாடலை அந்தோணிதாசன், அனிருத் பாடியுள்ளனர் என்பதும், விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன என்பதும் இருவருடைய ரொமான்ஸ் காட்சிகளும் எனர்ஜியாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.