ga('set', 'anonymizeIp', 1);
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனையை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் அந்த தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதை அடுத்து இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக தனது மகனை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காக போராடிய ஒரு தாய்க்கு கிடைத்த வெற்றி என்று பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ’ஒரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சீனுராமசாமி 31 ஆண்டுகள் போராடிய ஒரு தர்மத்தா வெற்றி பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ’மகிழ்ச்சி’ என குறிப்பிட்டு உள்ளார். மேலும் பல திரையுலக பிரபலங்கள் இதுகுறித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
திருவட்டார் ஊராட்சி…
தமிழகத்தில் கடந்த…
This website uses cookies.