சினிமா
மூன்றாவது முறையாக இணையும் விஜய், அட்லி இவர்களுடன் அனிருத்!

தமிழின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கத்தி, துப்பாக்கி படங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இதில் கீர்த்திச் சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தெறி, மெர்சல், ஐ அடுத்து மூன்றாவதாக இணையவுள்ளது. அடுத்ததாக நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விஜய், அட்லி இணையும் இந்த மூன்றாவது படத்தில் யார் நடிகர், நடிகைகள், டெக்ணிஷியன் என்ற விவரம் எதுவும் இன்னும் தெரியவில்லை.
ஆனால் அப்படத்தின் அனிரு தான் இசையமைப்பாளராக இருப்பார் என்று எதிர்பார்ப்பின் படி இந்தத் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படி இது நடந்தால் தளபதியுடன் அனிருத் இரண்டாவது முறை, அட்லீயுடன் முதல் முறை கூட்டணி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.