Connect with us

வணிகம்

IRCTC தட்கல் முன்பதிவில் மோசடி தடுக்கும் அதிரடி நடவடிக்கை: இனி ரயிலில் சீட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை!

Published

on

ரயில்வே தட்கல் (Tatkal) முன்பதிவில் சீட் கிடைக்காமை, இணையதளம் முடங்குவது போன்ற பிரச்சனைகள் கடந்த சில நாட்களாக பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து IRCTC தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

அதில், தட்கல் முறையில் மோசடி செய்ய பயன்படும் சுமார் 2.5 கோடி போலி பயனர் கணக்குகளை IRCTC நிறுவனம் முடக்கியது. இதன் மூலம், தட்கல் முறையில் உண்மையான பயணிகளுக்கு சீட்டுகள் கிடைக்க அதிக வாய்ப்பு ஏற்படும்.

தட்கல் முறையில் தினமும் காலை 10 மணிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆனால், கடந்த காலங்களில், தட்கல் முன்பதிவின் தொடக்க நொடிகளில் இணையதளம் முடங்கி, அனைத்து டிக்கெட்டுகளும் விரைவில் விற்கப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டு வந்தது.

இதே நேரத்தில், பயண முகவர்கள் வழியாக மட்டுமே சிலர் தட்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு வாய்ப்பு இருந்தது. இதனை தொடர்ந்து IRCTC மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து இதற்கு காரணமான போலி கணக்குகளை ஆய்வு செய்தனர்.

கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை, தட்கல் முன்பதிவின் தொடக்க நொடிகளில் சுமார் 2.9 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்தன. இதில் 2.5 கோடி போலி பயனர் கணக்குகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை IRCTC முடக்கி விட்டது.

மேலும் 20 லட்சம் கணக்குகள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதற்கு கூடுதலாக, போலி இணையதளங்கள் குறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவை மூலம், தட்கல் முறையில் மோசடி குறையும் மற்றும் பயணிகளுக்கு சீட்டுகள் பெறுவதில் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா12 minutes ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா42 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா4 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Google ads grant management services for nonprofits organization | mrkt360.