தொழில்நுட்பம்
புதிய ஒப்பா ஏ7 ஸ்மார்ட் போன் அறிமுகம்.!

இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ ஏ7 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன், அண்மையில் சீனா மற்றும் நேபாள சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய சந்தையில் தனது புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.
ஓப்போ ஏ7 ஸ்மார்ட் போன் இன் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் முழு திரையுடன் கூடிய ஏ.ஐ ஸ்மார்ட் செல்பி கேமரா மற்றும் 4230 எம்.ஏ.எச் பேட்டரி சேவை தான். ஓப்போ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒப்போ ஏ7 அறிமுகம் பற்றிய பதிவை இன்று பதிவேற்றம் செய்துள்ளது.
சீனா சந்தையில் அண்மையில் வெளியாகிய ஓப்போ ஏ7 இன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் இன் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.16,500 இருக்குமென்றும் அதே விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு வருமென்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

















