தொழில்நுட்பம்
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இன்று அறிமுகம்.! எப்படி லைவ்வா பாக்கலாம்.!

சியோமி பிரியர்கள் அதிகம் ஏதிர்பார்த்து காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் அறிமுகம் விழா இன்று நடைபெறவுள்ளது. சியோமி நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய சந்தையில் பிடித்ததை தொடர்ந்து, சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலை இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இன்று நடைபெறவிருக்கும் அறிமுக நிகழ்ச்சியில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் வேரியண்ட் மற்றும் விலை விபரங்கள் நேரலையில் ஒளிபரப்பப்படுமென்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சியோமி இன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்நிகழ்ச்சியின் நேரலையை சியோமி ரசிகர்கள் காணலாம்.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் துவக்க வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.15,300 க்கு விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் 19:9 என்ற பெரிய டிஸ்பிளேயுடன் கூடிய டூயல் பிரண்ட் கேமரா செட்டப்புடன் களமிறங்குகிறது. இத்துடன் கூடுதல் சிறப்பம்சமாக பி2i என்ற வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பமும் முதல் முறையாக ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் இல் அறிமுகம் செய்யப்படுகிறது.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் உடன் கூடிய MIUI 10 இயங்குதளத்துடன் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ நாளை முதல் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளத்தில் தனது விற்பனையைத் துவங்குகிறது.























