சினிமா செய்திகள்
அச்சு அசலாக தனது பாட்டியைப் போலவே மாறிய ஆன்ட்ரியா- பிசாசு 2 போஸ்டர் பின்னணி!

நடிகை ஆன்ட்ரியா-வின் பிசாசு 2 போஸ்டர் புகைப்படத்தின் பின்னணி குறித்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளையொட்டி நேற்று பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா தோற்றம் குறித்த அப்டேட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அந்த புகைப்படத்தின் பின்னணி குறித்து ஆன்ட்ரியா பதிவு செய்துள்ளார்.
ஆன்ட்ரியா தனது பதிவில், “நான் முதன்முதலில் மிஷ்கினிடம் கதை கேட்ட போது எனது அம்மாவின் அம்மா தோற்றம் குறித்து ஞாபகம் வந்தது. உடனடியாக எனது பாட்டியின் புகைப்படங்களை மிஷ்கினுக்கு அனுப்பினேன். எனது பாட்டி ஹெதரின் சிறு வயது புகைப்படமும் பழைய கால அழகியலும் படத்துக்கு மிகவும் ஒத்துப் போவதால் அதே தோற்றத்தில் என்னைத் தயார் செய்து பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட மிஷ்கின் விரும்பினார். அதனது வெளிப்பாடே இந்தப் புகைப்படம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram






















