சினிமா
த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!

தளபதி விஜய்யின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கவுள்ளது. அதற்காக சென்னையில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற படக்குழுவின் ஒட்டுமொத்த விமான டிக்கெட் லிஸ்ட் ஸ்பைஸ் ஜெட் வாயிலாக கசிந்த நிலையில், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க என்பதும் காஷ்மீர் ஷூட்டிங்கில் யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்தும் கசிந்த நிலையில், இதுக்கு மேல அமைதியா இருந்தா வேஸ்ட் என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவே அதிகாரப்பூர்வமாக ஆன் போர்ட் லிஸ்ட்டை அறிவித்து விட்டது.
அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த விஜய் இடையே பைரவா எனும் சொதப்பல் படத்தை கொடுத்திருந்தார். அதே போல கடந்த ஆண்டு பீஸ்ட் மற்றும் இந்த ஆண்டு வாரிசு என ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளான விஜய் படங்கள் வெளியாகின.

#image_title
இந்நிலையில், மாஸ்டர் படத்தை விட பெட்டர் படமாக தளபதி 67 படத்தை கொடுக்க 100 சதவீத உழைப்பை லோகேஷ் கனகராஜ் போட உள்ளார். அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் ஆன்போர்ட் ஆகி உள்ள லிஸ்ட்டை பார்த்தாலே தெரிகிறது.
பிப்ரவரி 1,2,3 அப்டேட் வரும் என லோகேஷ் சொன்ன நிலையில், லீக்கான விஷயத்தால் இன்றே மெகா அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

#image_title
நடிகர் சத்யராஜ், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் உள்ள தகவல் ஸ்பைஸ் ஜெட் டிக்கெட் லிஸ்ட்டில் இடம்பெற்ற நிலையில், கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆன்போர்ட் ஆகி உள்ள அறிவிப்பை முதற்கட்டமாக வெளியிட்டு தளபதி 67 தயாரிப்பு குழு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மேலும், நடிகை பிரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், மலையாள திரையுலகின் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகி உள்ளது.

#image_title
இன்னைக்கே இத்தனை அப்டேட் என்றால் வரும் நாட்களில் என்ன என்ன அப்டேட்கள் வரும் என்றும் விக்ரம் படத்துக்கு வெளியிட்டது போல ப்ரோமோ வீடியோ, தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ என ஒவ்வொன்றாக போட்டு விடுங்கள் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.