ஆரோக்கியம்
உலகின் சிறந்த 100 உணவுகளில் இந்திய உணவுகளுக்கு பெருமை!

உலகளாவிய ரீதியில் சிறந்த 100 உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் பல உணவுகளும் பெருமைபட இடம் பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் தென்னிந்திய உணவுகள் 59ஆவது இடத்தையும், இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் மற்றும் உணவுப் பிரதேசங்களான பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகியவை தொடர்ந்து சிறந்த இடங்களைப் பெற்றுள்ளன.
டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட பட்டியலின் முதல் இடத்தை இத்தாலியின் கம்பானியா பகுதியின் உணவுகள் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் பஞ்சாப் உணவுகள் 7ஆவது இடம், மகாராஷ்டிரா 41ஆவது இடம், மேற்கு வங்கம் 54ஆவது இடம் ஆகியவற்றைப் பெற்றுள்ளன.
இந்திய உணவுகளில் உலக அளவில் தனியிடத்தை பிடித்த சில பிரபல உணவுகள்:
முர்க் மக்கானி (Butter Chicken): 29ஆவது இடம்
ஹைதராபாத் பிரியாணி: 31ஆவது இடம்
அமிர்தசாரி குல்ச்சா மற்றும் பட்டர் கார்லிக் நான்: பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை
சென்னையின் சிறப்பு உணவுகள் பட்டியலில்:
தென்னிந்தியாவின் பெருமையான நகரங்களில் ஒன்றான சென்னை, உலகின் சிறந்த உணவுகளை வழங்கும் நகரங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பிரபலமான உணவுகள்:
இட்லி, தோசை, சாம்பார், மசாலா தோசை
சர்க்கரை பொங்கல், தேங்காய் சட்னி
முறுக்கு, போண்டா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்த பட்டியலில் மும்பை 5ஆவது இடத்தையும், டெல்லி, அம்ரித்சர், கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் சென்னை நகரங்களும் இடம் பிடித்துள்ளன.
இந்த பட்டியல் இந்திய உணவுகளின் தரத்தையும், உலகளாவிய புகழையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
These are the 100 best dishes in the world.https://t.co/a1ODy3UjJ3 pic.twitter.com/dXgXWyDe6n
— TasteAtlas (@TasteAtlas) December 15, 2024














