உலகம்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை 2 வாரம் உட்கொண்டும் உயிருடன் தான் இருக்கிறேன்: டிரம்ப்

மலேரியாவுக்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
மருந்தை, கொரோனாவில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளப் பயன்படுத்தினால் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதை ஒரு பொருட்டாகவும் மதிக்காத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நான் இரண்டு வாரங்கள் உட்கொண்டு முடித்துள்ளேன்.

எனது அறிவுக்குத் தெரிந்த வரையில், இதுவரை எனக்கு ஏதும் ஆகவில்லை. நான் இங்கு உங்கள் முன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.



















