ஆரோக்கியம்
மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான மீன் சமோசா செய்வது எப்படி? வீட்டு ருசியில் ரெசிபி!

மீன் சமோசா: சுவை மிகுந்த மாலை சிற்றுண்டி!
உடலுக்கு ஊட்டச்சத்து தரும் மீனை வைத்து பலவிதமான உணவுகள் தயாரிக்கப்படும். இதில் புதுமையான முயற்சியாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் விருப்பமான மீன் சமோசா செய்து சாப்பிடலாம். இது மாலை நேரத்தில் தீயல் மற்றும் சாம்பார் போன்ற பாரம்பரிய உணவுகளுக்கு மாற்றாகவும், சிற்றுண்டியாகவும் சிறந்தது.
🧂 தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட மீன் (விலைமீன் சிறந்தது)
வேகவைத்த உருளைக்கிழங்கு
மைதா மாவு
எண்ணெய் (வறுக்கும் விதத்தில்)
இஞ்சி பூண்டு பேஸ்ட்
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்
கொத்தமல்லி இலை
🍳 செய்முறை:
மீனை சுத்தம் செய்து அவித்து, அதிலுள்ள முள்ளை நீக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை நீக்கி மேஷ் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
மசாலா தூள்கள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கிளறவும்.
அதில் மீன் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசியவும் – மசாலா தயார்!
மைதா மாவை பிசைந்து, சிறிய சப்பாத்தி போல வட்டமாக உருவாக்கவும்.
அதில் மசாலா வைத்து சமோசா வடிவில் மடக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
உடனடி சுவை கொண்ட கிரிஸ்பியான மீன் சமோசா ரெடியாய் தயார்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இந்த ரெசிப்பியை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.
How to Make Crispy Fish Samosa at Home – Perfect Evening Snack Recipe!

















