தமிழ்நாடு
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மரணம்: முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிர் இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்வார்கள் என்று கூறப்படுகிறது
நகை திருட்டு வழக்கில் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளியான பிரபாகரனை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர் என்பதும் கைது பின்னர் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்தான் திடீரென அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றன
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:





















