தமிழ்நாடு
தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

ரூபாய் மூன்று கோடி வழக்கில் மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் தான் கைது செய்யப்படுவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்பது கர்நாடகம் பெங்களூரு உள்பட பல பகுதிகளில் அவர் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டதாகவும் விரைவில் சென்னை அழைத்து வரப்படுவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



















