தமிழ்நாடு
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு!

கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், கேசி வீரமணி, தங்கமணி உள்பட ஒருசில அதிமுக அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில மாதங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது என்பதும் இந்த சோதனையின் மூலம் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் உயர் கல்வித்துறை கேபி அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து தற்போது சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்த திமுக உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















