சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்துக்காக இளையராஜா குரலில் முதல் சிங்கிள்..!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ படத்துக்காக இசைஞானி இளையராஜா குரலில் பாடியுள்ள முதல் சிங்கிள் பாடலை படக்குழிவினர் வெளியிட உள்ளனர்.

இயக்குநர் சீனு ராமசாமி உடன் மீண்டும் விஜய் சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ‘காய்த்ரி நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் வழக்கமான யதார்த்த கிராமத்துக் கதையாகவே மாமனிதன் திரைப்படமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்காக இசைஞானி இளையராஜா தன குரலில் ஒரு பாடலைப் பாடி உள்ளார்.
மாமனிதன் திரைப்படத்துக்கான இசையை இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்தே இசை அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காய்த்ரி உடன் பேபி மனஸ்வி, குரு சோம சுந்தர்ம், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் எனப் படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குக் காத்து இருக்கின்றன.

இதுபோக அரை டஜன் படங்களில் கெளரவ தோற்றம், 2 மலையாளம், 3 தெலுங்கு, 1 கன்னடம், 2 ஹிந்தி, 2 வெப் சீரிஸ் படங்கள் என செம பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி செல்வி காயத்திரி நடிக்கும் #மாமனிதன் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா குரலில் #U1Records இசை நிறுவனம் வெளியிடும் முதல் பாடல் விரைவில்……. pic.twitter.com/9SYkB3fU0Q
— R.Seenu Ramasamy (@seenuramasamy) January 21, 2021






















