சினிமா செய்திகள்
’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்ட ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படம் இதுவரை எட்டு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் ஒன்பதாவது பாகம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. அதன் பின்னர் 2003, 2006, 2009, 2011 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்த படத்தின் ஒன்பதாம் பாகம் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் வின் டீசல் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதும் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.







