சினிமா
Fast X Review: வின் டீசல், ஜேசன் மோமாவின் மிரட்டல் அடி.. ஃபாஸ்ட் எக்ஸ் சும்மா பாயுது!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக டாம் கேரக்டரில் வின் டீசல் மிரட்டி வருகிறார். பால் வாக்கர் மரணத்திற்கு பின்னர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை படங்கள் வராது என நினைத்த நிலையில், 10வது பாகத்தையே 3 பாகங்களாக எடுக்கப் போவதாக அறிவித்து பட்டையை கிளப்பி வருகின்றனர்.
இயக்குநர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் வின் டீசல், மிட்செல் ரோட்ரிகஸ், ஜான் சினா, ஜேசன் மோமா, ஜேசன் ஸ்டேதம், பிரை லார்சன், கால் கடோட், சார்லிஸ் தெரான், ஜோர்டானா ப்ரூஸ்டர், சுங் காங் மற்றும் டைரீஸ் கிப்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

#image_title
டாம் செய்த ஒரு செயலால் டான்டே (ஜேசன் மோமா) அப்பா இறக்கிறார். அதற்காக பழிவாங்கும் படலமாக ஆக்வாமேன் நடிகர் ஜேசன் மோமா வின் டீசலின் குடும்பத்தையே பழிவாங்க களமிறங்குகிறார்.
சிரித்துக் கொண்டே கொன்று குவிக்கும் மேட் மேக்ஸ் வில்லனாக வரும் ஜேசன் மோமாவிடம் இருந்து தனது குடும்பத்தை வின் டீசல் எப்படி காப்பாற்றினார் என்பதை சீறிப்பாய்ந்து பறக்கும் கார்களின் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளுடன் அசத்தலாக சொல்லி உள்ளனர்.
கொஞ்சம் பேச்சு, நிறைய ஆக்ஷன் பாணி படமாகவே இந்த படத்தை இயக்குநர் உருவாக்கி உள்ள நிலையில், ஃபாஸ்ட் எக்ஸ் படத்தை பார்க்க சென்ற ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தை பிறந்ததில் இருந்தே பார்த்துக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட்டாக அமைந்துள்ளது.

#image_title
பல ஆயிரம் கோடி போட்டு படமெடுத்தாலும் சிஜி எப்படி இருக்குன்னு தான் ஹாலிவுட்டிலும் பார்க்கின்றனர். கதை எந்தளவுக்கு புதுசா டெப்த்தா இருக்குன்னு எல்லாம் அவதார் 2 படமே பார்க்காத போது நாமும் ஏன் பார்க்க வேண்டும் என காமிக் கதைகளை வைத்துக் கொண்டு ஆக்ஷன் அதிரடிகள், குடும்ப சென்டிமென்ட் மசாலாக்களையும் கொஞ்சமாக காமெடியையும் தூவி என்னத்தையோ கிண்டி வைத்த ஸ்பெஷல் டிஸ் என பெயரிடுவது போல இந்த படத்தையும் கிண்டி வைத்து இருக்கின்றனர்.
பெரிய பணக்காரங்க வீட்டுக் கல்யாணத்துக்கு போயிட்டு மட்டன் பிரியாணியே போட்டாலும் கறி வேகலைன்னா எப்படி சாப்பிட முடியாதோ அந்த அளவுக்குத் தான் படம் சுமார் ரகமாக உள்ளது.
கேப்டன் மார்வெல் பிரை லார்சன், வொண்டர் உமன் கால் கடோட், சார்லஸ் தெரானுக்கும் ஹீரோயின் மிட்செல் ரோட்ரிகஸுக்கும் இடையே நடக்கும் அந்த சண்டைக் காட்சி என ரசிகர்களை கவரும் அம்சங்கள் நிறைந்திருப்பதால் கதையாடா முக்கியம் படத்தை பாருடான்னு பார்த்துட்டு வரவேண்டியது தான்!
ரேட்டிங்: 3/5