உலகம்
ஈ மெயில் தெரியும்.. ஈ சேவை தெரியும்.. ஈ-டேஸ்ட் என்னன்னு தெரியுமா?

அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு பேக்கரியில் இருக்கும் கேக்கை இங்கே இந்தியாவில் நாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே விர்ச்சுவுவல் ரியாலிட்டி மூலம் சுவைக்க முடியுமா?… முடியும் என்கிறது நவீனதொழில்நுட்பம். இதற்கு பெயர்தான் ஈ–டேஸ்ட் என்று சொல்கிறாரகள் நவீன ஜாம்வான்கள். அமெரிக்காவின் ஒவறியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து இந்த ஈ-டேஸ்ட் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
ஈ-டேஸ்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியை நம்முடைய வாயுடன் பொருத்திக் கொண்டால், இந்த கருவியில் உள்ள சில வேதியியல் சென்சார்களும், ஒயர்லெஸ் டிஸ்பென்சரும் நம்முடைய நாவில் சுவை உணர்வைத் துாண்டுமாம். இது நம்மை ஒரு மகத்தான டிஜிட்டல் சூழலுக்கு அழைத்துச் செல்லும். அங்கே ,மீன், கேக், சூப், ஸ்வீட்டுகள் என சகல உணவுகளையும் டிஜிட்டல் முறையில் சுவைக்கலாம். எப்படி விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியைக் கண்களில் மாட்டிக் கொண்டால் வேறொரு உலகத்திற்குச் செல்வதாக நாம் உணர்கிறோமோ அதுபோ இந்த ஈ-டேஸ்ட் கருவி சுவையையும் உண்மக்கு நிகரான அனுபவத்தை் தரும் என்கின்றனர் இந்த ஈ-டேஸ்ட் கருவியை இதுவரை பலமுறை நுாற்றுக்கு மேற்பட்டவர்களிடம் பரிசோதித்துப் பார்த்ததில் இந்த கருவி உண்மைக்கு நிகரான சுவையைத் தருகிறது என 70 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றர். மீதமுள்ள 30 சதவீதம் மீண்டும் பலகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி கிட்டிவிட்டால் இந்த ஈ-டேஸ்ட் முறை பயன்பாட்டுக்கு வரும் என்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவைகளும், வாசனைகளும் நம்முடைய நினைவுகள் மற்றும் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை.. எங்களுடைய சென்சார்கள் மற்ம் டிஸ்பென்சர்கள் மூலம் உங்களுக்கு சுவைகளும் வாசனைகளும் கடத்தப்படும்… என்கிறார் ஈ-டேஸ்ட் தொழில்நுட்பத்தை வடிவமைத்த வல்லுனர்ளில் ஒருவரன லீ. இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்பபு ஆகிய ஐந்து அடிப்படையான சுவைகளையும் இந்த ஈ–டேஸ்ட் கருவி மூலம் உணரமுடியும். ஆனால் காரம் சுவை மட்ம் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது..
அது மட்டுமல்ல சுவையும் வுாசனையும் நமது மூளையியின் செயல்திறன் மற்றும் ஞாபகங்களுட ன் தொடர்பு கொண்டிருப்பதால் இந்த ஈ-டேஸ்ட் தொழி்ல்நுட்பம் மருத்துவத் துறையிலும் பல்வே று பரிணாமங்களில் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தவிரவும் உணவு மாதிரிகளைச் சோதனை செய்யவும் உணவில் சுவைகள் சரியான விகிதத்தில் இருப்பதை உறுதி செய்யவும் உணவு பாதுகாப்புத் துறையிலும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கின்றனர்
இனி நாமும் விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளளயாடிக் கொண்டே விதவிதமன உணவுகளை சுவைக்கலாம்.









