சினிமா
ஆண் குழந்தைக்கு அப்பாவான அட்லீ.. ஜவான், ஏகே63 என கொண்டாடும் ரசிகர்கள்!

இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய அட்லீ நடிகர்கள் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த பிரியா சூர்யாவின் சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்திருந்தார். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.

#image_title
ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு நண்பன் படத்தில் அட்லீயின் உழைப்பை பார்த்து வியந்து போன நடிகர் விஜய் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார்.
எங்க அண்ணனுக்கு நான் தான் டா செய்வேன்.. அப்படித்தான் டா செய்வேன் என ஆரம்பித்த அட்லீ தெறி, மெர்சல் மற்றும் பிகில் என கோலிவுட்டில் நடிகர் விஜய்யின் மார்க்கெட்டையும் சம்பளத்தையும் சில ஆண்டுகளிலேயே 100 கோடிக்கும் மேலாக செல்லும் அளவுக்கு உயர்த்தி விட்டார்.
ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியுள்ள அட்லி இந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக பிப்ரவரி மாதம் ஜூனியர் அட்லீயை ரிலீஸ் செய்யப் போறேன் என சொல்லி இருந்தார். ஆனால், ஜனவரி மாதத்திலேயே பிறந்து விடுகிறேன் என அட்லீயின் குழந்தை ஜனவரி 31ம் தேதியான இன்று பிறந்துள்ளார்.

#image_title
அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவான சந்தோஷத்தை இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் பதான் திரைப்படம் 600 கோடி வசூலை கடந்து 1000 கோடியை டார்கெட் செய்துள்ள நிலையில், அடுத்து வெளியாக உள்ள ஜவான் திரைப்படமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என தெரிகிறது.
அடுத்ததாக அஜித்தின் ஏகே62 அல்லது ஏகே63 இரண்டில் ஒரு படத்தை அட்லீ இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், தளபதி 68 படத்தை 400 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இயக்கவும் அட்லீ முடிவு செய்து வைத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.