சினிமா
தளபதி 67 பூஜைக்கே பிஜிஎம் மிரட்டுதே.. போட்டோஸ் கேட்டா வீடியோவே போட்டுட்டீங்களேப்பா!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நடிகர்கள் அர்ஜுன், மன்சூர் அலி கான் மற்றும் நடிகைகள் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தளபதி 67 காஸ்ட் அப்டேட்டில் உள்ள பலரே இந்த பூஜையில் பங்கேற்கவில்லையே என்கிற ஆச்சர்யம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருந்ததை இப்படி ஸ்பைஸ் ஜெட் விமான தகவல் லீக் ஆகி எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை உருவாகி விட்டதே என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

#image_title
நடிகை த்ரிஷா ஆன்போர்ட் ஆகும் அறிவிப்பு இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில், தற்போது பூஜை வீடியோவையும் போட்டு தளபதி தரிசனத்தை விஜய் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர்.
14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க உள்ள நிலையில், பூஜைக்கு மங்களகரமாக சேலை அணிந்து வந்து பொன்னியின் செல்வன் குந்தவையாகவே காட்சியளித்தார்.

#image_title
அவருடன், கூடவே நடிகை ப்ரியா ஆனந்தும் வந்திருந்தார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் விஜய் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சிகளும், இயக்குநர் லோகேஷ் கனகராஜை மன்சூர் அலிகான் கட்டித் தழுவிய காட்சிகளும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
எல்லாவற்றையும் விட பூஜைக்கு வரலைன்னாலும் பூஜை வீடியோவுக்கு த்ரில்லர் பிஜிஎம்மை தாறுமாறாக போட்டு அனிருத் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.