சினிமா
விஜய்க்கு 150 கோடி.. அட்லீக்கு 50 கோடி.. தளபதி 68 படத்தின் பட்ஜெட் மட்டும் இவ்வளவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், கதிர், மன்சூர் அலி கான், சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக லியோ படம் உருவாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனுக்காக நடிகை த்ரிஷா இந்தியா முழுவதும் டூர் அடித்து வரும் நிலையில், அவரது காட்சிகளை தவிர்த்து சண்டைக் காட்சிகளை சென்னையின் சில இடங்களில் படக்குழு படம் பிடித்து வருகின்றனர்.

#image_title
முக்கியமான காட்சிகள் பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தளபதி 68 படம் குறித்த ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே நடிகர் விஜய் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்தை பாலிவுட் இயக்கி உள்ள அட்லீ மீண்டும் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

#image_title
அந்த படத்திற்காக அட்லீக்கு மட்டும் சம்பளமாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் ஷங்கரே சமீபத்தில் இந்தியன் 2 படத்துக்குத்தான் 50 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், அதற்குள் குருவையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு அட்லீ வளர்ந்து விட்டார்.
மறுபக்கம் நடிகர் விஜய்க்கு மட்டும் 150 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் சம்பளமாக இந்த படத்திற்கு வழங்கப்போவதாகவும் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அக்டோபர் மாதம் லியோ வெளியாக உள்ள நிலையில், அக்டோபர் அல்லது நவம்பர் துவக்கத்தில் தளபதி 68 படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.