சினிமா
அடுத்த பாலய்யா நான் தான்! அட்லீக்கே விபூதி அடித்தாரா விஜய்?

சமீபத்தில் தான் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளியான மெகா சீரியல் வாரிசு படத்தில் நடித்து எக்கச்சக்க ட்ரோல்களில் சிக்கி இருந்தார் நடிகர் விஜய்.
இந்நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் கோடம்பாக்கம் முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி வரை ஆட்டம் காண வைத்துள்ளது.

#image_title
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக ஒரு பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அதற்கு முன்னதாக வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநரும் நடிகருமான கோபிசந்த் மலினேனி படத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோபிசந்த் மலினேனி சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்ன நிலையில், சம்பளம் எவ்வளவு தருவீங்க என கேட்டதாகவும், 130 கோடி சம்பளம் தருகிறோம் என சொன்ன நிலையில், உடனடியாக படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

#image_title
லியோ படத்தை முடித்து விட்டு அடுத்து அட்லீ படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பாலய்யாவையே இயக்கிய டோலிவுட் இயக்குநர் கோபிசந்த் மலினேனி படத்தில் தான் விஜய் நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.
இப்போதைக்கு ரசிகர்களுக்கு செம ஆக்ஷன் விருந்தாக இந்த ஆண்டு லியோ வரவுள்ள நிலையில், அடுத்ததாக எக்ஸ்ட்ராடினரி ஆக்ஷன் படத்தை டோலிவுட்டில் இருந்து எதிர்பார்க்கலாம் என்றும் அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.