சினிமா
அட்லியோட குழந்தைக்கு இப்படியொரு பெயரா? நயன்தாரா குழந்தைகள் போல கலாய்க்கிறாங்களே!

இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இருவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஷூட்டிங் தாமதமாகிக் கொண்டே சென்ற வேலையில், குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்த இருவரும் சமீபத்தில் விஜய் தலைமையில் வளைகாப்பு செய்தனர்.
அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். ஆனால், குழந்தையின் புகைப்படத்தையோ, பெயரையோ இருவரும் வெளியிடவில்லை.

#image_title
இந்நிலையில், ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன அறிவிப்பை வெளியிட்ட ஷாருக்கான் ரசிகர்களுடன் நடத்திய சாட்டின் போது தன்னை அறியாமலே அட்லீயின் குழந்தையின் பெயரை அம்பலப்படுத்தி விட்டார்.
உடனடியாக பிரியா அட்லீயும் தனது குழந்தையின் பெயர் இதுதான் என அறிவிக்க ரசிகர்கள் இது என்ன பெயர்? இப்படி புரியாதது போல இருக்குன்னு நயன்தாரா குழந்தைகளின் பெயர்கள் வெளியான நிலையில், குவிந்த ட்ரோல் போல ட்ரோல் செய்து வருகின்றனர்.

#image_title
இயக்குநர் அட்லீயின் ஆண் குழந்தைக்கு ‘மீர்’ எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், நடிகர் ஷாருக்கானின் அப்பாவின் பெயர் தான் மீர் என்கிற நிலையில், ஷாருக்கானே இந்த பெயரை அட்லீயின் குழந்தைக்கு சூட்டினாரா? அல்லது விஜய்க்கு ஐஸ் வைத்து பல படங்களை இயக்கியது போல ஷாருக்கானுக்கும் பெரிய ஐஸாக வைக்க தனது குழந்தைக்கு ஷாருக்கானின் அப்பாவின் பெயரை அட்லீ வைத்துள்ளாரா என ட்ரோல்கள் பறக்கின்றன.
மீர் என வைப்பதற்கு பதிலாக பீர் என வைத்திருக்கலாம் என்றும், குழந்தைக்கு வைக்க தமிழில் நல்ல பெயரே கிடைக்கவில்லையா? என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இயக்குநர் அட்லீ கிறிஸ்தவர், அவரது மனைவி பிரியா இந்து தற்போது அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தைக்கு மீர் என முஸ்லீம் பெயரை வைத்துள்ள நிலையில், எம்மதமும் சம்மதம் என்பதை அட்லீ வெளிப்படுத்தி இருக்கிறார் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.