கிரிக்கெட்
தினேஷ் கார்த்திக்குக்கும் முரளி விஜய்க்கும் மீண்டும் சண்டை.. களத்திலேயே மோதல்!

லண்டன்: இந்தியா இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில், முரளி விஜய்க்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் என்ற மூன்று தமிழக வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
அவர்கள் மூன்று பேரும் தமிழிலேயே பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் தமிழில் பேசுவது வைரலாகி உள்ளது.

தினேஷ் கார்த்திக்குக்கும் முரளி விஜய்க்கும் மீண்டும் சண்டை
ஆனால் தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜயும் இதில் நேரடியாக பேசிக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகளாக சண்டை இருக்கிறது. கடந்த 2012ல் முரளி விஜய் தினேஷ் கார்த்திக் இடையே சண்டை ஏற்பட்டது.
தினேஷ் கார்த்திக், தனது முதல் மனைவி நிகிதாவுடன் முரளி விஜய் தொடர்பில் இருப்பதாக கூறி, நிகிதாவை பிரிந்தார். அதன்பின் நிகிதாவும் விஜயும் திருமணம் செய்து கொண்டனர். இதில் இருந்து இவர்கள் பேசிக்கொள்வது கிடையாது.
இந்த நிலையில் தற்போது, களத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை நிலவி வருகிறது. மறைமுகமாகவும் நேரடியாகவும் இவர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.





















