சினிமா செய்திகள்
மொரிசீயஸில் தொடங்கிய ‘தேவி-2’ படப்பிடிப்பு!

மதராசபட்டினம், தலைவா படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஹாரர் ஹானரில் வெளியான தேவி படம் பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் தேவி வெளியானது.
தற்போது, மீண்டும் ‘தேவி’ மேஜிக்கை ரீ-க்ரியேட் செய்ய இயக்குநர் ஏ.எல் விஜய் முயன்று வருகிறார். ‘தேவி-2’ படத்தை எடுக்கும் பணியைத் துவங்கி விட்டார் ஏ.எல். விஜய்.
இரண்டாம் பாகத்திலும், பிரபுதேவா, தமன்னாவே நடிக்கின்றனர். வேறு நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மொரிசீயஸில் நடைபெற்று வருகிறது. தமன்னா மற்றும் பிரபுதேவா மொரிசீயஸ் தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மீண்டும் தேவி பேய் மிரட்டுமா? என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.


















