சினிமா செய்திகள்
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை: அபிஷேக் ரிவியூவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரான அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் திரைப்படங்களை ரிவ்யூ செய்து கொண்டிருந்தார் என்பதும் திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்துக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. பெரும்பாலான அவருடைய ரிவியூக்கள் மொக்கையாக இருக்கும் என்றும் அதே போல் பிரபலங்களிடம் கேட்கும் கேள்விகள் படு மொக்கையாக இருக்கும் என்ற விமர்சனங்கள் தான் அதிகம் வரும் என்பது தெரிந்ததே.
ஆனால் தான் உலகிலேயே ஒரு மிகச் சிறந்த விமர்சகர் என்ற ரீதியில் அவர் பேசிவருவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பின்னரும் ஒவ்வொருவருக்கும் அவர் கொடுத்து விமர்சனம் நிகழ்ச்சியையே வெறுக்கும் அளவுக்கு உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே ஒருசில போட்டியாளர்களை ரிவ்யூ செய்து வந்த அபிஷேக் இன்றும் போட்டியாளர்கள் சிலரை விமர்சனம் செய்துள்ளார். வனிதா போல நாதியா வெளிப்படையாக இருப்பார் என்றும் ஐக்கி பெர்ரியுடன் யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகி விட முடியாது என்றும் இசைவாணி தனது சொந்த சோக கதையை கூறி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.
மேலும் பாவனி ரெட்டி ஏன் நாமினேஷனில் வரவில்லை என்றால் அவரது சோகக்கதை அனைவரையும் தாக்கம் செய்துவிட்டது என்று கூறுகிறார். அபிஷேக்கின் இந்த ரிவ்யூவை நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை என்றும், இவரை முதலில் வெளியே அனுப்ப வேண்டுமென்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனேகமாக இந்த வாரம் அபிஷேக் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
#Day9 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/6TaydCKBCL
— Vijay Television (@vijaytelevision) October 12, 2021























