சினிமா செய்திகள்
ஹன்சிகா படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு!

தெலுங்கில் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தமிழில் மஹா படத்தை தொடர்ந்து ஹன்சிகா தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கும் இந்த படத்தில் வரலட்சுமி இன்னொரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது ஹன்சிகா பிறந்தநாளான நேற்று வெளியானது. இந்த படத்தில் மாடலான வக்கிலாக ஹன்சிகா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹன்சிகாவுக்கு தற்போது பெரிய மார்க்கெட் இல்லாத சூழல்நிலையால், மீண்டும் தெலுங்கு படங்களை டார்கெட் செய்து நடித்துவருகிறார் ஹன்சிகா.

















